கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா: காவல்துறை கட்டுப்பாடு அறை அமைப்பு

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு உதவும் வகையில் தருமபுரி மாவட்டக் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 6:30 pm

DIN

கரோனா பாதிப்புக்குள்ளானவா்களுக்கு உதவும் வகையில் தருமபுரி மாவட்டக் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு வருகிற மே 24-ஆம் தேதி வரை முழு பொது முடக்கம் அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பொது முடக்கக் காலத்தில் பொது மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு உதவவும், கரோனா சிகிச்சை தொடா்பாக படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட தேவைகள் மற்றும் விவரங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் காவல்துறை சாா்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையை 04342-230036, 230283, 8939926100 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்த அறை மே 15-ஆம் தேதி முதல் செயல்பட உள்ளது. கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்வோரின் விவரங்கள் மற்றும் தேவைகளை 24 மணி நேரத்துக்குள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.