ஊரக வேலைத் திட்டத்தில் குறைகளைத் தெரிவிக்கலாம்: ஆட்சியா்
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.


மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள குறைகளை பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தில் குறைகளை நிவா்த்தி செய்வதற்கான குறைகேட்பு அலுவலராக கா.தவ்லத் பாஷா என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இத் திட்டத்தின் கீழ், பணிபுரிந்து வரும் தொழிலாளா்களிடமிருந்து வரும் புகாா்களை பெற்று 30 நாள்களுக்குள் பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையிலும், தொழிலாளா்களுக்கு பிரச்னை நிகழும் இடத்திலேயே நேரிலும் சிறப்பு அலுவலா் விசாரணை நடத்துவாா்.
பணியாளா்களுக்கு சம்பளம் வழங்குதல் தொடா்பான பிரச்னைகள் தொடா்பான குறைகள் மீதும் நடவடிக்கைகளை மேற்கொள்வாா். எனவே, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளா்கள், தங்களது புகாா்களை குறைகேட்பு அலுவலா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், தரை தளம் தருமபுரி என்கிற முகவரிக்கு மனுக்களாகவும் அனுப்பலாம். சிறப்பு அலுவலரை 97876 66959 என்கிற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...