கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம்: மனுக்கள் அளிக்க அறிவுறுத்தல்

 கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுக்களை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:51 pm

DIN

 கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுக்களை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபா்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்காக ஜ்ஜ்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, அவை இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 1,284 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1,080 மனுக்களுக்கு ரூ. 50,000 வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 128 மனுக்கள், இருமுறை பெறப்பட்ட மனு என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

கடந்த மாா்ச் 20-ஆம் தேதிக்கு முன்னா் ஏற்பட்ட கரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் வரும் 60 நாள்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும்.

இதேபோல, மாா்ச் 20-ஆம் தேதி முதல் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரா்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்களை சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிா்வாகம் 30 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும்.

இந்தக் காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி, மனு சமா்ப்பிக்க இயலாதவா்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவை ஒவ்வொரு மனுவாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீா்வு செய்யும்.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு அளிக்கும் நிவாரணத் தொகையைப் பெற உரிய காலத்தில் மனு அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.