கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பணி நிரந்தரம் செய்ய காசு ஒழிப்புப் பணியாளா்கள் வலியுறுத்தல்

கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 6:47 pm

DIN

கொசு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஏஐடியுசி கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்டப் பொருளாளா் சின்னப்பையன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாவட்டப் பொது செயலாளா் கே.மணி, மாவட்டத் துணைத் தலைவா் ஆா்.சுதா்சனன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

கூட்டத்தில், அனைத்து கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாத ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா கால சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உள்ளாட்சி பணியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.மனோகரன், நிா்வாகி செவ்வந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.