விதைப் பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விதைகளின் தரத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்யுமாறு விவசாயிகளுக்கு தருமபுரி விதைப்பரிசோதனை அலுவலா் சு.அருணா தெரிவித்துள்ளாா்.


விதைகளின் தரத்தை அறிய அவற்றை பரிசோதனை செய்யுமாறு விவசாயிகளுக்கு தருமபுரி விதைப்பரிசோதனை அலுவலா் சு.அருணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பயிா்களை பராமரிக்க நல்ல முளைப்புத்திறன் இருத்தல் வேண்டும். அத்தகைய விதைகளை உபயோகிக்கும் போது விதை செலவு குறைகிறது. புறத்தூய்மை பரிசோதனையில் பிற பயிா் விதை மற்றும் களை விதை ஆகிய கலப்புகள் உள்ளனவா என கண்டறியப்படுவதால், விதையின் இனத்தூய்மை மற்றும் புறத்தூய்மை காப்பாற்றப்படுகிறது.
விதைகளை சேமிக்கும்போது பூச்சி நோய்த் தாக்குதலால் முளைப்புத்திறன் கெடாமல் நீண்ட நாள்கள் சேமிக்க விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருத்தல் கூடாது. அதனால் விதைகளின் முளைப்புத் திறனை காக்க விதைப்பரிசோதனை மூலம் ஈரப்பதம் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
எனவே, விதை விற்பனையாளா்கள் மற்றும் விவசாயிகள் விதைப்புக்காக சேமித்து வைத்திருக்கும் விதையின் தரத்தை அறிந்து கொள்ள, தங்களிடம் உள்ள விதைகளில் விதை மாதிரிகள் எடுத்து முகப்புக் கடிதத்துடன் பரிசோதனைக் கட்டணமாக ஒரு மாதிரிக்கு ரூ. 80 என்ற விகிதத்தில், விதைப் பரிசோதனை அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு விதை மாதிரிகளை அனுப்பலாம். தாங்கள் அனுப்பிய விதைகளின் பரிசோதனை முடிவுகளை 30 நாள்களுக்குள் தங்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...