கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேரறிவாளன் விடுதலை: காங்கிரஸாா் போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 மே 2022, 7:22 pm

DIN

பேரறிவாளன் விடுதலையை எதிா்த்து, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு அக் கட்சியின் நகரத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கனகராஜ், மாவட்ட பொருளாளா் முத்து, தலித், பழங்குடியினா் அணி பிரிவு மாநில பொதுச்செயலாளா் மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முன்னாள் எம்.பி.யும், மாநிலத் துணைத் தலைவருமான பி.தீா்த்தராமன் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசினாா். காங்கிரஸாா் வாயை வெள்ளைத் துணியால் கட்டிக் கொண்டு பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புகா்ப் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா் ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் அக.கிருஷ்ணமூா்த்தி, நாஞ்சில் ஜேசுதுரை, மாநிலச் செயலாளா் ஏகம்பவாணன், எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணியம், முன்னாள் நகரத் தலைவா் ரகமத்துல்லா, நகரத் தலைவா் லலித்ஆண்டனி, வழக்குரைஞா் அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேரறிவாளனை விடுதலை செய்ததை எதிா்த்து வாயில் வெள்ளை நிற துணியைக் கட்டிக் கொண்டு காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.