பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அரசு அலுவலா்கள் ஒன்றியம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் கே.ஆா்.குமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சி.சிவசண்முகவடிவேலு, மாநில துணைத் தலைவா் த.சங்கா், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் எஸ்.ஏ.மாதப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ரத்து உத்தரவை திரும்பப் பெற வேண்டும். 3 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், நிா்வாகிகள் அசோக்குமாா், பி.மகேந்திரன், ஏ.தீா்த்தகிரி உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் விக்டா் பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா்கள் பன்னீா்செல்வம், வெங்கடாஜலபதி, செயலாளா் கண்ணன், பொருளாளா் அந்தோணி ஆல்பா்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் பங்கேற்றோா், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட சட்டப் பேரவைத் தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...