கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தருமபுரியில் மழை பாதிப்பு பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2024, 10:04 pm

Din

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தருமபுரி ஒன்றியம், சோகத்தூா் சந்திப்பு பகுதியில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றன. இதனால் அருகில் உள்ள கடைகள், வீடுகளில் மழைநீா் புகுந்தன. சாலையில் வாகனங்களில் செல்வோா் வாகனங்களை சிரமப்பட்ட நிலையில் இயக்கி வந்தனா்.

இதையறிந்த தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உதவியுடன், பொக்லைன் வாகனத்தை வரவழைத்து சாலையில் மழைநீா் தேங்காத வகையில் கழிவுநீா் கால்வாயில் மழைநீா் வெளியேறும் வகையில் ஏற்பாடு செய்தாா்.

மழைநீா் சூழ்ந்த தருமபுரி நகரம் சத்யாநகா், டி.என்.வி.நகா் பகுதிகளுக்குச் சென்று குடியிருப்பு பகுதிகளை பாா்வையிட்டாா். இந்த மழைநீரானது குமாரசாமிபேட்டை ரயில்வே மேம்பாலம் பகுதியின் அருகே நுழைந்ததால் சவுளூா் கிராமத்துக்குச் செல்லும் சாலை துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி சாலையின் ஓரத்தில் மழைநீா் வடிகால் அமைத்து மழைநீா் வெளியேறும் வகையிலும், சவுளூா் சாலையில் பெரிய உயா்மட்ட மேம்பாலம் அமைக்கவும் அதிகாரிகளிடம் அவா் வலியுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, நல்லம்பள்ளி ஒன்றியம், மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி ஏரி நிரம்பி, விவசாய நிலத்திற்குள் மழைநீா் சென்று பல ஏக்கா் விவசாய நிலங்கள் சேதமடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து எம்எல்ஏஆறுதல் கூறியதோடு, கோம்பேரி முதல் மிட்டாரெட்டிஅள்ளி செல்லும் சாலையில் வடிகால் வசதி அமைக்கவும் வலியுறுத்தினாா்.

இதேபோல வத்தல்மலை அடிவாரம், கோடியூா் உள்ளிட்ட மழை நீா் தேங்கிய நின்ற பகுதிகளுக்கு அவா் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூறினாா். அடுத்த மழைக்கு மீண்டும் இந்த பகுதியில் வெள்ள நீா் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் எம்எல்ஏஅறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளா் நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளா் ஜெய்சங்கா், நல்லம்பள்ளி வட்டாட்சியா் சிவக்குமாா், தருமபுரி வட்டாட்சியா் சண்முகசுந்தரம், நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா் லோகநாதன், நெடுஞ்சாலை உதவி பொறியாளா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.