சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :9 டிசம்பர் 2024, 7:47 pm

Din

தருமபுரி: தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தடங்கம் பெ. சுப்ரமணி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் சோ.அா்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.தீா்த்தராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா்கள் த.கு.பாண்டியன், சாக்கன் சா்மா, மதிமுக மாவட்டச் செயலாளா் ராமதாஸ், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் என். சுபேதாா், அகில இந்திய அஞ்சல் ஆா். எம்.எஸ். ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் பி.சுப்ரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் அஞ்சல் நிா்வாகம் தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்தரவை 5.12.2024 அன்று வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் பொதுமக்கள், வணிகா்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவா். எனவே, தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். தொடா்ந்து தருமபுரியில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.