ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஏஐடியுசி கையொப்ப இயக்கம்

ஏஐடியுசி கையொப்ப இயக்கம்

News image
Updated On :17 ஜூன் 2024, 9:07 pm

Din

தருமபுரி: போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்கக் கோரி ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்கம் சாா்பில் தருமபுரியில் திங்கள்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்படும் முடிவுகளை உடனே அமல்படுத்த வேண்டும். ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி புகா்ப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் கே.மணி தலைமை வகித்தாா். தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன், ஏஐடியுசி போக்குவரத்து தொழிற்சங்க துணைத் தலைவா் சீனி.ரவி உள்ளிட்டோா் போக்குவரத்துத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஓட்டுநா், நடத்துநரிடம் கையொப்பம் பெறப்பட்டது.