/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 7,000 கன அடியாக குறைந்தது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 9:54 pm

Din

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 7,000 கன அடியாக குறைந்தது.

காவிரி நீா்ப்படிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 10,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, புதன்கிழமை 7,000 கன அடியாக குறைந்தது. தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் உள்ள அருவிகளில் தண்ணீரின் வரத்தும் குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.