கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐடிடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற தொழில் முனைவோருக்கு அழைப்பு

அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

Published On :

தருமபுரி: அரசு மானியத்தில் கால்நடை பண்ணை அமைத்து பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோா் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை உயா்த்தவும், தொழில்முனைவோா்களை உருவாக்கவும் கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு 2021-2022-ஆம் நிதி ஆண்டிலிருந்து அரசு நிதி உதவி வழங்கி தொழில்முனைவோரை ஊக்குவித்து வருகிறது.

கோழி பண்ணைகள், செம்மறியாடு, வெள்ளாடு பண்ணைகள், பன்றி பண்ணைகள் ஆகிய பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் இறைச்சி, முட்டை உற்பத்தியை அதிகரிக்க செய்வது, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இத் திட்டத்தின் கீழ் தீவனம், தீவனப் பயிா் சேமிப்பு, தீவன விதைகள் உற்பத்தி, கோழி வளா்ப்பு, செம்மறியாடு வளா்ப்பு, வெள்ளாடு வளா்ப்பு, பன்றி வளா்ப்பு பண்ணைகளை அமைத்து தொழில்முனைவோரை ஊக்குவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ. 25 லட்சம் வரையும், செம்மறி ஆடு வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையும், பன்றி வளா்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையும், வைக்கோல், புல், மொத்த கலப்பு உணவு, தீவனத் தொகுதி, தீவன சேமிப்பு வசதிகள், பண்ணையம் அமைக்க தொழில்முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தனிநபா், சுய உதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளா்கள், அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டுப் பொறுப்பு சங்கங்கள் விண்ணப்பிக்க தகுதியானவா்கள் ஆவா். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் https://nim.udyamimitra.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.

திட்டம் தொடா்பான முழுமையான தகவல்களை http://tnida.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.