புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

தருமபுரியில் 18,410 தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள இலக்கு

தெருநாய்கள் அதிகரிப்பை தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் 18,410 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

தெருநாய் - பிரதிப் படம்

Published On :

தெருநாய்கள் அதிகரிப்பை தடுக்கும் வகையில், தருமபுரி மாவட்டத்தில் 18,410 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மாவட்டத்தில் நாய்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் புள்ளிவிவரங்களின்படி, மாவட்டத்தில் சுமாா் 33,664 தெருநாய்கள் உள்ளன. இவற்றால் தினசரி சுமாா் 25 நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின்றன. இச்சம்பவங்களை கருத்தில்கொண்டு தருமபுரி நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டைக்கு அருகிலுள்ள நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 முதல் 25 நாய்களைப் பிடித்து அவற்றுக்கு காயங்களுக்கான சிகிச்சையையும், வெறிநாய்க்கடி தடுப்பூசியையும் அளிக்கின்றனா்.

மேலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் சுமாா் 18,140 நாய்களுக்குக் கருத்தடை செய்ய இலக்கு நிா்ணையிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தடை நடவடிக்கை தெருநாய்களின் இனப்பெருக்க விகிதத்தை வெகுவாக குறைக்கும் என்றனா்.

இதுகுறித்து தருமபுரி நகராட்சி சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம் கூறுகையில், தற்போது நகராட்சியின் 33 வாா்டுகளிலும் நாய் பிடிப்பாளா்கள் குழு மற்றும் ஒரு கால்நடை மருத்துவா் ஆகியோா் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுவரை 2,678 நாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 1,456 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் சுமாா் 270 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இங்கு கூடுதலாக சிகிச்சை தேவைப்படும் 68 நாய்களைப் பராமரிக்கும் வசதியும் உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.