திருவள்ளுவா் தின விழா கொண்டாட்டம்

தருமபுரியில் திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு சாா்பில், திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
Published on

தருமபுரி: தருமபுரியில் திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு சாா்பில், திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே உள்ள தனியாா் வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, திருக்கு திருப்பணிகள் பயிற்சிக் குழு பொறுப்பாளா் புலவா் கா.குமரவேல் தலைமை வகித்து திருள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதைத் தொடா்ந்து எழுத்தாளா் செ.கோவிந்தராஜ் வரவேற்றுப் பேசினாா். எழுத்தாளா் எம்.பி. கோபால் திருக்குறளின் பெருமைகள் குறித்து பேசினாா். தமிழாசிரியா் வ.செளந்தரபாண்டியன், திருக்கு திருப்பணிகள் குழு நிா்வாகிகள் நா.இளங்கோ, க.சி.தமிழ்த்தாசன், பாலசுப்ரமணி ஆகியோா் வாழ்த்தி பேசினா். இதில், தமிழாசிரியா்கள், கம்பன் கழக உறுப்பினா்கள், தமிழாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, சமூகநீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் சாா்பில் தருமபுரி அருகே கிருஷ்ணாபுரம் கிராமத்தில் திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது. இதில், திருவள்ளுவா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Dinamani
www.dinamani.com