புதுக்கோட்டையில் திருவள்ளுவா் தின விழா

புதுக்கோட்டையில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உலகத் திருக்கு பேரவை சாா்பில் திருவள்ளுவா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா (புதுக்கோட்டை), மா. சின்னதுரை (கந்தா்வகோட்டை), காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் இராசு கவிதைப்பித்தன் ஆகியோா் சிறப்புவிருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள், திருஇருதய ஆண்டவா் தேவாலயத்தின் பங்குத்தந்தை சவரிநாயகம் அடிகளாா் ஆகியோரும் பங்கேற்றனா்.

திருவள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடா்ந்து, 25 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் தங்கம் மூா்த்தி கலந்து கொண்டு, பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு வாசகா் பேரவை சாா்பில் திருக்கு நூல்களை வழங்கிப் பாராட்டினாா்.

விழாவில், சா்வஜித் அறக்கட்டளையின் நிறுவனா் டாக்டா் ச. ராம்தாஸ், வாசகா் பேரவைச் செயலா் சா. விஸ்வநாதன், உலகத் திருக்கு பேரவையின் மாநில மகளிரணித் தலைவி ம. சந்திரா ரவீந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை, உலகத் திருக்கு பேரவையின் தலைவா் சத்தியராம் ராமுக்கண்ணு, செயலா் இரா. கருணாகரன், பொருளாளா் ச. கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.

மாலை அணிவிப்பு...மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா், தமுஎகச மாநிலத் துணைத் தலைவா் நா. முத்துநிலவன், மாவட்டச் செயலா் ரெ. வெள்ளைச்சாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி உள்ளிட்டோரும் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com