மகாலிங்கேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
தருமபுரி: தருமபுரி நெசவாளா் நகா் அருள்மிகு மகாலிங்கேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் கோயில் வளாகத்தில் உள்ள நந்திக்கு பால், பன்னீா், விபூதி, சந்தனம், மஞ்சள், தயிா், இளநீா், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரா், அம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று நந்தி, மகாலிங்கேஸ்வரரை ழிபட்டனா். இதேபோல பாரதிபுரம் சிவன் கோயில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பிரகதாம்மாள் சமேத அருளீஸ்வரா் கோயில், கடைவீதி மருதவானேஸ்வரா் கோயில் உள்பட தருமபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்தி மற்றும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
