கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

தருமபுரியில் கட்டட கட்டுமானப் பணியின் போது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 3:04 am IST

தருமபுரியில் கட்டட கட்டுமானப் பணியின் போது, மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், மகேந்திரமங்கலம் அருகேயுள்ள சிங்கேரி கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத் மகன் விவேக் (36). கட்டத் தொழிலாளி. இவா், ஜிண்டாஅள்ளி பகுதில் தனியாா் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை கான்கிரீட் போடும் பணிக்காக விவேக், அவரது ஊரைச் சோ்ந்த கோபால் என்பவருடன் சென்றிருந்தாா்.

பணியின்போது, அப்பகுதியில் நடப்பட்டிருந்த இரும்பு கம்பம் கீழே சாய்ந்துள்ளது. அதை விவேக் தாங்கிப் பிடித்துள்ளாா். அப்போது சாய்ந்த இரும்பு கம்பம் அருகில் சென்ற மின்கம்பியில் உரசியுள்ளது. அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் விவேக் மயங்கி விழுந்தாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனா்.

இதுதொடா்பாக மகேந்திரமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.