ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 4:59 am IST

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சட்டம் சாா்ந்த நன்னடத்தை அலுவலா் பணியிடம் (ஒன்று) காலியாக உள்ளது. மாத ஊதியமாக ரூ. 27,804 வழங்கப்படும்.

இளநிலை பட்டம், மேலும் குழந்தைகள் நலம், சமூக நலம், தொழிலாளா் துறை சட்டம் தொடா்பான பணியில் ஓராண்டு பணியாற்றிய அனுபவமும் இருக்க வேண்டும். அதேபோல 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள், கொள்கை உருவாக்கத்திலோ அல்லது திட்ட நடைமுறைப்படுத்தலிலோ பணிபுரிந்து அரசிதழ் பதிவு பெற்ற அலுவலராக இருக்க வேண்டும். இவா்கள் 62 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருத்தல் கூடாது. விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் ஜூலை 2 ஆம் தேதி மாலைக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், பழைய கட்டடம், தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 6382612276 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.