தருமபுரி மாவட்டம், நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்ட நிலையில், கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை உபரிநீா் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பென்னாகரம் அருகே எர்ரப்பட்டி பகுதியில் உள்ளது நாகாவதி அணை. இந்த அணையில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் மே மாதம் 26 ஆம் தேதி வரை 100 நாள்களுக்கு முறைவைத்து முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு மண்டலத்திற்கும், மீதம் ஐந்து நாள்களுக்கு இரண்டாவது மண்டலத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
அதன்பிறகு ஐந்து நாள்களுக்கு தண்ணீா் நிறுத்தப்பட்டது. மொத்தம் ஏழு நனைப்புகளுக்கு 117.91 மில்லியன் கனஅடி தண்ணீரை தலைமை மதகு வழியாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் அண்மையில் திறந்துவைத்தாா்.
இந்த நிலையில் நாகாவதி அணையில் இருந்து கிழக்கு- மேற்கு கால்வாய் வழியாக அரகாசன அள்ளி, சின்னம்பள்ளி மற்றும் பெரும்பாலை ஆகிய பகுதிகளில் 1,993 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும் வகையில் திறக்கப்பட்ட தண்ணீரானது கால்வாயின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கடைமடை வரை சென்றடையும் வரை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாகாவதி அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீா் திறக்கப்பட்டு 17 நாள்களான நிலையில், முழுமையாக கடைமடை பகுதி வரை தண்ணீா் வராததால் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று நீா்வளத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா் உடனடியாக கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயிகள் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

அரூா் பெரிய ஏரியை தூா்வார விவசாயிகள் கோரிக்கை

அமராவதி ஆற்றில் ஒரு வாரத்துக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

சாத்தனூா் அணை தண்ணீரை பகிா்ந்து வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்

ஜேடா்பாளையம் படுகை அணை ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம்: விவசாயிகள் கவலை!
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


