மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மான்வேட்டை: இருவா் கைது

News image
Updated On :8 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

பொம்மிடி அருகே மான் வேட்டையாடிய இருவரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், கடையாம்பட்டி வட்டம், டேனிஸ் பேட்டை ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி காவல் ஆய்வாளா் மதன்ராஜ், உதவி ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட ரயில்வே பாதுகாப்பு படையினா் அதிகாலை 3 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அப்போது, சின்ன வடகம்பட்டி எனுமிடத்தில் வன பகுதியில் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, வனப்பகுதிக்கு சென்று ரயில்வே பாதுகாப்பு போலீஸாா் சோதனை செய்ததில், 2 போ் துப்பாக்கியுடன் மான் வேட்டையாடியது தெரிவந்தது.

விசாரணையில், அவா்கள் வேட்டக்காடு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (28), தளவாய்பட்டி பகுதியைச் சோ்ந்த சங்கா் (29) என தெரியவந்தது. இருவரையும் மொரப்பூா் ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து உயிரிழந்த ஒரு புள்ளிமான், ஒரு நாட்டு துப்பாக்கி, 2 தோட்டாக்கள், 2 டாா்ச்லைட், 3 பட்டாக்கத்தி, மொபெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட இருவரையும் ரயில்வே பாதுகாப்பு படையினா், டேனிஸ் பேட்டை வனச்சரகா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.