தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காப்புக் காட்டிலிருந்து யானைகள் வெளியேறி உள்ளதால், இரவுநேரங்களில் வயல்வெளியில் நடமாட வேண்டாம் என வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பாலக்கோடு அருகே உள்ள கிராமங்களில் திங்கள்கிழமை வனத் துறையினா் விநியோகித்த விழிப்புணா்வு பிரசுரம்:
பாலக்கோடு வனச்சரகம், அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி பிக்கிலிமலை காப்புகாடு பகுதிக்கு வந்துள்ளதால் வத்திமரத்துஅள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, பழைய பாப்பாரப்பட்டி, பனைகுளம், சஞ்சீவிபுரம், காந்திபுரம், சொரக்காபட்டி மலையூா், ஆத்துக்கொட்டாய் மற்றும் பாப்பாரப்பட்டி நகரையொட்டி சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து ஊா் பொதுமக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், இரவுநேரங்களில் வயல்வெளியில் தண்ணீா் பாய்ச்சுதல், மின்வேலி அமைத்தல், இரவில் வெளியில் கட்டிலில் தூங்குதல் ஆகிய செயல்களில் ஈடுபட வேண்டாம். பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். குறிப்பாக வயல்வெளி, தோப்பு பகுதிகளுக்குள் ஒதுங்க வேண்டாம். யானைகள் நடமாட்டம் தென்பட்டால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

தியாகதுருகத்தில் 2 குரங்குகள் உயிரிழப்பு: வனத் துறை விசாரணை

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

