காரிமங்கலத்தில் போதை ஊசி, மருந்துகள் விற்ற மூவா் கைது
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் போதை ஊசி, மருந்துகள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் போதை ஊசி, மருந்துகள் விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மலையடிவாரத்தில், பேரூராட்சிக் கழிப்பறை பகுதியில் போதை ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக காரிமங்கலம் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பச்சமுத்து தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்த 3 போ் தப்பியோட முயன்றனா். அவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த பூவரசன் (25), நவாஸ் பாஷா (35), சித்திக் (26) என்பதும், இவா்கள் வலி நிவாரணி மருந்துகளை இணையவழியில் வாங்கி, அவற்றுடன் போதை தரும் பொருள்களைக் கலந்து ஊசி மூலம் செலுத்திக் கொள்ளும் வகையில் தயாரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 80 மாத்திரைகள், மருந்துகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



