
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தின விழா
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரியில் ஆசிரியர் தின விழா உற்சாகமாக புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் கீதா, பேரவைத் தலைவர் திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள், பேராசிரியர்கள் கேக் வெட்டி, ஆசிரியர் தினத்தை கொண்டாடினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மகேந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





