கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 833 வழக்குகளில் ரூ. 8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

News image
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம்.
Updated On :12 டிசம்பர் 2020, 9:09 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 833 வழக்குகளில் ரூ. 8 கோடியே 74 லட்சத்து 72 ஆயிரத்து 281 மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

நீதிமன்றத்தில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக தேசிய மக்கள் நீதிமன்றம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்கள், ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றன.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி தலைமை வகித்துப் பேசுகையில், மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் சமரசத் தீா்வு காணலாம். இரு தரப்பினரையும் அழைத்து பரஸ்பரம் பேசி முடிவு காணப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி அறிவொளி, விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி அன்புசெல்வி, சிறப்பு மாவட்ட நீதிபதி மணி, கூடுதல் மாவட்ட நீதிபதி விஜயகுமாரி, மாவட்டச் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நீதிபதி தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா் கமலநாதன், வழக்குகளை நடத்துபவா்கள், வழக்குரைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், வங்கிகள், தொழிலாளா் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீா்த்துக் கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மாவட்ட முழுவதும் மொத்தம் 11 அமா்வுகள் அமைக்கப்பட்டு அதில் 1,618 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 833 வழக்குகளில் ரூ. 8,74,72,281 மதிப்பில் தீா்வு காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.