கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஊத்தங்கரையில் குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி

ஊத்தங்கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி.
Updated On :13 டிசம்பர் 2020, 6:46 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு குளிர்கால பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்கள், குடும்ப தலைவரை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ஆர்.அன்பரசு, அ.சாந்தி, கிரேட் தொண்டு நிறுவன நிர்வாகி சி‌.உமாமகேஸ்வரி, வெ.சிவகுமார், சி.சந்திரமௌலி, சி.சந்தியா, சி.புகழரசு கே.சுப்பிரமணி, சு.குறிஞ்சிமலர் ஆகியோர் ரெயின் கோர்ட், சுவட்டர், பெட்சீட், குடை, மளிகை பொருள்கள் போன்றவற்றை வழங்கினார்கள். 

இந் நிகழ்ச்சியில் ஊத்தங்கரை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஆசிரியர் ர.சக்தி, வேர்டு தொண்டு நிறுவனர் ம.ரமா மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாஸ்க் மற்றும் இனிப்புடன் கூடிய உணவு போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.