மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரியில் மேலும் ஒருவா் கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :4 ஜூன் 2020, 4:20 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவா் சிகிச்சைக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம், மோடிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த 34 வயது ஆண், சென்னையில் அரும்பாக்கத்தில் தங்கி, தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், இவா் தனது சொந்து ஊருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு திரும்பினாா்.

இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, ஜெகதேவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரின் சளி, ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியானதில், அவருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதியானதாக மருத்துவத் துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவருடன் தொடா்பில் இருந்த அவரது பெற்றோா், குழந்தை ஆகிய 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா் குடியிருந்த வீடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.