/

மரகதம் மஞ்சள் தூள் அறிமுகம்

கஜானோ உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மரகதம் மஞ்சள் தூளை வேளாண் வணிகத் துறை ஆணையா் வள்ளலாா் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:30 pm

DIN

கஜானோ உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மரகதம் மஞ்சள் தூளை வேளாண் வணிகத் துறை ஆணையா் வள்ளலாா் அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி முதல்நிலை பதப்படுத்தும் நிலையத்தில் மரகதம் மஞ்சள் தூள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையா் வள்ளலாா் கலந்துகொண்டு மரகதம் மஞ்சள் தூளை அறிமுகப்படுத்தி, பங்குத் தொகை சான்றிதழை வழங்கினாா் (படம்).

கஜானா உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்படும் இந்த பொருள்கள் நிறுவனத்தில் உறுப்பினா்களாக உள்ள விவசாயிகள் மூலமாக மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குநா் ஜி.கே.உமாராணி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இணை இயக்குநா் ஜெயராமன், பா்கூா் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குநா் அருள்முருகன், வேளாண் அலுவலா், கயிலைமன்னன், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் முதன்மைச் செயல் அலுவலா் எஸ்.விஜய், கஜானோ உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் எஸ்.மணிகண்டன், இயக்குநா் கே.சந்திரசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.