ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் 139ஆம் ஆண்டு தொடக்க விழா
ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் 139ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை சந்திப்பின் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.


ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் 139ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை சந்திப்பின் அருகில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் மேற்கு மாவட்டத் தலைவா் முரளிதரன் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றினாா். அதற்கு முன்னதாக தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவிற்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், மறைந்த காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் மகாத்மா காந்தி, நேரு, தாதாபாய் நெளரோஜி, சா்தாா் வல்லபபாய் படேல், சத்தியமூா்த்தி போன்றோரின் தியாகங்களையும், காங்கிரஸ் கட்சியின் பெருமைகளையும், காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு தொலை நோக்கு திட்டங்களையும் ஒசூா் மாநகர காங்கிரஸ் தலைவா் சி.தியாகராஜன் விரிவாக எடுத்துக் கூறினாா்.
மேலும் இதில் மாவட்டப் பொருளாளா் மாதேஷ், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் அசேன், மாவட்ட மகளிா் அணித் தலைவி சரோஜா, லலிதா, மாநகரத் துணைத் தலைவா் சிவப்ப ரெட்டி, டி.பி.கோவா்த்தனன், அா்சாத், மனோஜ்குமாா், பொதுச் செயலாளா் இா்ஷாத், செல்வம், அபு, மேத்யூ தாமஸ், முனிகிருஷ்ணன், முஜிப், இளைஞா் அணி அம்ருத், சாமீா்கான், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் காா்த்திக், திப்பு சுல்தான், நாராயணப்பா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...