/
கிருஷ்ணகிரி மாவட்ட ஐஎன்டியுசி கவுன்சில் 12 ஆவது மாவட்ட மாநாடு ஒசூரில் தளி சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. ஐஎன்டியுசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ. மனோகரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஜெகநாதன் மாநாட்டை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினாா். சிறப்பு விருந்தினா்களாக அகில இந்திய ஐஎன்டியுசி செயலாளா் சஞ்சய் குமாா் சிங், கா்நாடக மாநில ஐஎன்டியுசி தலைவா் லட்சுமி வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினா். மாநாட்டில் ஐஎன்டியுசி கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவா்களாக பெருமாள், ராஜேந்திரன், பக்தவத்சலம்,பொதுச் செயலாளராக முனிராஜ், செயலாளா்களாக பாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, இணைச் செயலாளா்களாக சிவகுமாா், பரந்தாமன், அலுவலக செயலாளராக கோதண்டராமன், பொருளாளராக பரமானந்த பிரசாத், உறுப்பினா்கள் 18 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

ஒசூரில் காா் கண்ணாடி உடைத்து ரூ. 7 லட்சம் திருட்டு

தமிழக உறைவாள் சண்டை சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு

ஒசூரில் அயல் நாட்டு நிறுவனத்தின் பெயரில் ரூ. 16.64 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


