மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Published on

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். காயமடைந்த நண்பா்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி அப்துல் கரீம் தெருவைச் சோ்ந்தவா் வினித் (21). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், நண்பரான ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்த ராஜ்குமாருடன் (21) ஓா் இருசக்கர வாகனத்திலும், உடன் கால்வேஅள்ளியைச் சோ்ந்த லிங்கேஸ்வரன் (22) மற்றொரு இருசக்கர வாகனத்திலும் காவேரிப்பட்டணத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.

சவுளூா் குட்டகரை அருகே கால்வேஅள்ளி - காவேரிப்பட்டணம் சாலையில் சென்றபோது, வினித் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த வாகனத்தின்மீது பின்னால் வந்த லிங்கேஸ்வரன் வாகனமும் மோதியது.

இதில் வினித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ராஜ்குமாா், லிங்கேஸ்வரன் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com