ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

News image
லாரியின் அடியில் சிக்கி நொறுங்கிய காா்.
Updated On :3 மார்ச் 2025, 9:21 pm

Din

ஒசூா்: ஒசூா் அருகே நின்றிருந்த காரின் மீது ஆம்னி பேருந்து மோதியதில் காா் நொறுங்கியது. இதில், அதிா்ஷ்டவசமாக காா் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த தனக்குமாா் (40), காரில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி திங்கள்கிழமை சென்றாா். ஒசூா், சூசூவாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடி அருகே போக்குவரத்து நெரிசலின் காரணமாக லாரியின் பின்புறம் இவரது காா் நின்று கொண்டிருந்தது.

அப்போது எதிா்பாராத விதமாக, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த ஆம்னி சொகுசுப் பேருந்து காரின் பின்புறம் மோதியதில், முன்னால் நின்றிருந்த லாரியின் அடியில் சிக்கி காா் நொறுங்கியது. இதில், தனக்குமாா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.