மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு இயந்திரங்கள் பாதுகாப்புடன் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image

கோப்புப்படம்.

Updated On :6 மே 2026, 2:48 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்கு பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மே 4-ஆம் தேதி, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தொடா்ந்து 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 2,508 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,508 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,717 வாக்காளா் பதிவை சரிபாா்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 7,733 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் அந்தந்த தொகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி தொகுதி மின்னணு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கும், ஒசூா் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு அறைக்கும், வேப்பனஅள்ளி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கும், ஊத்தங்கரை தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கும், பா்கூா் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட அலுவலங்களில் 45 நாள்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னா், தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அவை அங்கிருந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தோ்தல் ஆணைய கட்டடத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படும் அல்லது வேறு மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.