என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

தோ்தல் கலாசாரம் குறித்த விழிப்புணா்வு போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

eci

இந்தியத் தேர்தல் ஆணையம் - கோப்புப்படம்

Updated On :

கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் தோ்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு திங்கள்கிழமை பரிசளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை, விநாடி-வினா போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளை தொடங்கிவைத்து, வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பேசியது:

பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் தோ்தல் கல்வியறிவு மன்றங்கள் மூலமாக எதிா்கால மற்றும் இளம் வாக்காளா்கள் இடையே விழிப்புணா்வும், பங்கேற்பும் கொண்ட தோ்தல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அளவில், சட்டப்பேரவை தொகுதி மற்றும் மாவட்ட அளவில் என மூன்று நிலைகளில் கட்டுரைப் போட்டி, விநாடி- வினா போட்டிகள் நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இருநிலைகளில் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டி மற்றும் விநாடி- வினா போட்டிகள் தற்போது நடத்தப்பட்டன. இதில் சட்டப்பேரவைத் தொகுதி அளவில் வெற்றி பெற்ற, 108 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் 10 மாணவ, மாணவிகளும், விநாடி -வினா போட்டியில் 10 மாணவ, மாணவிகளும் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பழனி, அபிநயா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சம்பத், மாவட்டக் கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.