
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கரைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகளில் 800-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை கரைக்கப்பட்டன.

விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைப்பு - கோப்புப் படம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகளில் 800-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் புதன்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,780 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்து வழிபட்டனா். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 3, 5, 7-ஆவது நாள்களில் நீா்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி அணை, பாரூா் ஏரி, மஞ்சமேடு, கெலவரப்பள்ளி அணை, தேன்கனிக்கோட்டை ஏரி உள்ளிட்ட பல்வேறு நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைப்பது வழக்கம்.
கிருஷ்ணகிரி அணையில் 135 சிலைகளும், மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றில் 500-க்கும் மேற்பட்ட சிலைகளும், தேன்கனிக்கோட்டை, ஒசூா், பாரூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் 200-க்கும் மேற்பட்ட சிலைகளும் கரைக்கப்பட்டன.
இந்நீா்நிலைகளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல், தருமபுரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் பக்தா்கள் விநாயகா் சிலைகளை வாகனங்கள் மூலம் கொண்டுவந்து கரைத்தனா். விநாயகா் சிலைகளை கரைக்க இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினா், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா், வருவாய்த் துறையினா் ஒருங்கிணைந்து பாதுகாப்புப் பணியில் பணியில் ஈடுபட்டுள்ளனா். எடை மிகுந்த சிலைகள் கிரேன் மூலம் கரைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







