இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

"பெண்ணாதிக்க சமுதாயம் ஆணாதிக்கமாக மாறியது'

பெண்ணாதிக்க சமுதாயம் காலப்போக்கில் மாறி ஆண்கள் நாட்டை நிர்வகிப்பவர்களாகவும், பெண்கள் வீட்டை நிர்வாகிப்பாளர்களாகவும்

News image
Updated On :28 டிசம்பர் 2017, 2:03 am

DIN

பெண்ணாதிக்க சமுதாயம் காலப்போக்கில் மாறி ஆண்கள் நாட்டை நிர்வகிப்பவர்களாகவும், பெண்கள் வீட்டை நிர்வாகிப்பாளர்களாகவும் மாற்றம் ஏற்பட்டது என்றார் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் த்துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன். 
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் "தமிழ் இலக்கியங்களில் மகற்கொடை' எனும் தலைப்பில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், அவர் பேசியது:-
மனிதன் முதன் முதலில் தோன்றியபோது அவன் முறையற்ற பரிணாம வளர்ச்சியினை கொண்டு இருந்தான்.   திருமணம் என்பது கூட அங்கீகாரம் இல்லாமல் நிலையற்றத் தன்மையாக இருந்துள்ளது.  
ஏனெனில் காரணம் இல்லாமல் கணவன் மனைவியை விட்டுப் பிரிவதும்,  மனைவி கணவனைவிட்டுப் பிரிவதும் பெரும்பாலும் அக்காலங்களில் நடைபெற்றது.  அதன் பிறகே மணம் புரிதல் என்பது பெரியோர்களால் சுற்றமும்,  நட்பும் கொண்டு நடத்தப்பட்டது. 
அன்றைய காலங்களில் பெண்களே அனைத்துத் துறைகளிலும் முன்னிலை பெற்று வந்தனர். அப்போது பெண்ணாதிக்கச் சமுதாயமாகவே இருந்துள்ளது.  பிறகு காலப்போக்கில் ஆண்கள் நாட்டை நிர்வகிப்பவர்களாகவும், பெண்கள் வீட்டை நிர்வாகிப்பாளர்களாகவும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 
தொல்காப்பியம், பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்ற சங்க இலக்கியங்கள் மகள் திருமணப் பந்தம் குறித்து தெரிவித்துள்ளன  என்றார். 
நிகழ்ச்சிக்கு  கல்லூரித் தலைவர் பி.கே.செங்கோடன் தலைமை வகித்தார். செயலர் கே.நல்லுசாமி, டிரினிடி அகாதெமி தலைவர். ஆர்.குழந்தைவேல் வாழ்த்தி பேசினார்.  கல்லூரி முதல்வர்  எம்.ஆர்.லட்சுமிநாராயணன், திருப்பூர் மாவட்டத்துக்குள்பட்ட முத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியை  டி.சாவித்திரி,  கல்லூரி நிர்வாக அலுவலர்  என்.எஸ். செந்தில்குமார்,  தமிழ்த் துறை தலைவர் நா.மோகன்குமார், உதவிப் பேராசிரியைகள் என்.மகாலட்சுமி, ஆர்.சாவித்திரி,  எஸ்.ஜெயமதி,  ஏ.லதா,  ஜே.பாரதி, எஸ்.மைதிலி,  மாணவி பி.விஷ்ணுப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.