நாமகிரிப்பேட்டையில் ரூ.41 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம்
நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.41 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.


நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ.41 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
நாமகிரிப்பேட்டை ஏல மையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விரலி, உருண்டை, பனங்காளி ரக மஞ்சள் ஏலம் நடைபெறும். இதில் சுற்று வட்டாரப் பகுதி மஞ்சள் விவசாயிகள், வியாபாரிகள் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு வந்து பங்கேற்பர்.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், விரலி ரகம் 500 மூட்டை, உருண்டை ரகம் 280 மூட்டை, பனங்காலி ரகம் 35 மூட்டை என மொத்தம் 875 மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதில் விரலி ரகம் குறைந்தபட்சமாக குவிண்டால் ரூ.7,009}க்கும், அதிகபட்சமாக ரூ.9,631}க்கும், உருண்டை ரகம் ரூ.6,389 முதல் அதிகபட்சமாக ரூ.8,009}க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சமாக ரூ.13,345}க்கும், அதிகபட்சமாக ரூ.15,685}க்கும் விற்பனையாயின. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று ஏலம் எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...