மாநில யோகா போட்டிகள்
ராசிபுரம் ஸ்ரீஆஸ்ரம் யோகா மையம் சார்பில், 9-ஆவது மாநில அளவிலான யோகா போட்டிகள் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


ராசிபுரம் ஸ்ரீஆஸ்ரம் யோகா மையம் சார்பில், 9-ஆவது மாநில அளவிலான யோகா போட்டிகள் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், தமிழக அளவில் சுமார் 50 பள்ளிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் முன்வளைதல், பின்வளைதல், சமநிலைப்படுத்துதல் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னதாக போட்டிகளை ராசிபுரம் ரோட்டரி சங்க சாசனத் தலைவர் என்.பாலசுப்பிரமணியம், ஸ்ரீவித்யா மந்திர் பள்ளிகளின் துணைத் தலைவர் டாக்டர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
ஸ்ரீஆஸ்ரம் யோகா மையத்தின் தலைமைப் பயிற்சியாளர் வி.சரவணன் தலைமையில், யோகா பயிற்சியாளர்கள் தனலட்சுமி, ராஜகுமாரி, பாலசம்பூர்ணம், கோகுலா, சாந்தி, பத்மநாபன், கிருஷ்ணன், தாமரைச்செல்வன், பிரபு, சிவக்குமார், பன்னீர், மாணிக்கம், வெங்கடாசலம், கஜேந்திரன் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். இதில் பயிற்சியாளர் ராஜகுமாரி தலைமையிலான அணி முதலிடமும், சாந்தி தலைமையிலான அணி 2-ஆம் இடமும் பெற்றன. இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...