மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மஹேந்திரா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மல்லசமுத்திரம் மஹேந்திரா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இம் முகாமில் 5ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகள், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களுக்கும் 2,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இம் முகாமில் டி.வி.எஸ் மோட்டார்ஸ், மகிமா டெக்னாலஜி, அவான்ஜ் டெக்னாலஜி, எஸ்.எஸ்.டெக் இன்னோவேசன், அப்பல்லோ பார்மஸி குரூப், பி.ஆர்.எஸ் டயர்ஸ் எல்.ஜி.பி.லிட், ராஜ்யஸ்ரீ மோட்டார்ஸ், டால்மேடிக் லிட், டைட்டன் நிறுவனம், ஹெச்.ஜி.எஸ் சொல்யூசன்ஸ், யமாஹா மோட்டார்ஸ் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வேலைநாடுநர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மஹேந்திரா பொறியியல் கல்லூரி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்திலும் நேரடியாக விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது முகாமில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம்.
முகாமுக்கு நாமக்கல், மோகனூர், திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்திவேலூர் ஆகிய இடங்களிலிருந்து இலவச பேருந்து வசதியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு 04286 222260 என்ற தொலைபேசி எண் அல்லது 9750052233 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூரில் போட்மெயில் விரைவு ரயில் நின்றுசெல்ல எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாநகாரட்சிப் பகுதியில் 4 இடங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள்!






