மக்கள்பாதை அமைப்பு சார்பில் மாவட்டம் முழுவதும் 5,000 பனை விதைகள் ஒரே நாளில் நடவு செய்யப்பட்டன.
மக்கள் பாதை அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதை ஒரே நாளில் விதைக்கும் நிகழ்வுக்கு திட்டமிட்டு அதை நவம்பர் 4 ஆம் தேதி நடவு செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 5,000 பனை விதை ஒரே நாளில் நடவு செய்யப்பட்டன. அதேபோல், நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் பனை விதை நடவு செய்யப்பட்டது.
அதன் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நாமக்கல் கொசவம்பட்டி ஏரிக்கரை, நல்லிபாளையம் சாவடி ஏரிக்கரைகளில் பனை விதைகளை நட்டனர். இந்த களப் பணியில் நம்பிக்கை இல்ல இயக்குநர் கதிர்செல்வன், தொழிலதிபர் தயாளன், பொறுப்பாளர் பத்மநாபன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மக்கள்பாதை அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
மக்கள்பாதை-தாய்மண் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை விதைகளை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக வட்டூர் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் விதைக்கும் விழா நடைபெற்றது.
உ.சகாயம் ஐ.ஏ.எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள்பாதை அமைப்பின் தாய்மண் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு லட்சம் பனை விதைகளை விதைக்கும் விழா தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட வட்டூர் சின்ன அண்ணம்பாளையம் ஏரிப் பகுதிகளில் பனை விதைகளை மக்கள் பாதை பொறுப்பாளர்கள் விதைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மக்கள் பாதையின் திருச்செங்கோடு ஒன்றியப் பொறுப்பாளர் கண்ணன், தாய்மண் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கோகிலா, கெளதமி, சோலைராஜா, வட்டூர் கிராமத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் சக்திவேல், சந்திரசேகர், கார்த்திக், திவாகர், ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில், வட்டூர்-சின்னஅண்ணம்பாளையம் ஏரிப் பகுதிகளில் சுமார் 500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |

பாரதிராஜா திரையில் தோன்றி நடித்த திரைப்படங்கள்!

பாரதிராஜா மறைவு! செய்திகள் நேரலை
இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் புகழஞ்சலி!
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!


