/

சன்மார்க்க சங்க விழா

திருச்செங்கோடு சன்மார்க்க சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் விழா ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:16 am IST

திருச்செங்கோடு சன்மார்க்க சங்கத்தின் சார்பில் திருவள்ளுவர் விழா ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
சன்மார்க்க சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் தலைமை வகித்தார். சங்கத்தின் பொருளாளர் தொழிலதிபர் ராஜேஸ்வரன் வரவேற்றார். திருவள்ளுவர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவையின் தலைவர் திருநாவுக்கரசு வள்ளுவத்தில் அரசியல் கோட்பாடுகள் எனும் தலைப்பில்
பேசியதாவது:
மக்கள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்,  தன்னுடைய ஒவ்வொரு உரையிலும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டுவார். தன்னை மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தியது வள்ளுவரின் திருக்குறள்தான் என்று கூறியுள்ளார். கம்பனில் இருந்து கண்ணதாசன் வரை எல்லாக் கவிஞர்களும் தங்கள் கவிதைகளில் திருக்குறளின் கருத்துகளைப் பயன்படுத்தியுள்ளது எக் காலத்துக்கும் பொருந்தும் வல்லமை கொண்டது திருக்குறள் என்பதற்கு சான்றாகும் என்றார்.
திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி பேராசிரியை விஜயசுந்தரி திருவள்ளுவர் பிரபஞ்சத்திற்கு அளித்த கொடை என்னும் தலைப்பில் பேசினார். சன்மார்க்க சங்கத்தின் துணைத் தலைவர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.