வானொலி பள்ளி மூலம் வேளாண் தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் என். அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம், திருச்சி அனைத்திந்திய வானொலி நிலையத்தின் மூலம் "பருவநிலை மாற்றங்களுக்கேற்ற வேளாண்மை தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் வானொலி பள்ளியை நவம்பர் முதல் ஜனவரி வரை நடத்தவுள்ளது.
இந் நிகழ்ச்சியில் மாறிவரும் பருவநிலைகளுக்கேற்ப வேளாண் தொழிலில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அணுகுமுறைகளான மண்வள மேம்பாடு, மண் மூடாக்கு, பருவமாற்ற காலங்களில் கைகொடுக்கும் பூ மற்றும் காய்கறி பயிர்களின் சாகுபடிக் குறிப்புகள், வறட்சியை தாங்கி வளரக்கூடிய குறுகிய காலப் பயிர்கள், மழைநீர் சேமிப்பு முறைகள், பருவநிலை மாற்றத்துக்கேற்ற ஒருங்கிணைந்த பண்ணையம், மானாவாரி காலங்களில் கால்நடைகளின் பராமரிப்பு முறைகள், தீவன மேலாண்மை குறித்த விழிப்புணர்வு, விளக்க உரைகளும் 13 வாரங்களில் வானொலி வாயிலாக விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ரூ. 100 மட்டுமே செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 13-ஆவது வாரம் விவசாயிகளுக்கு நேரடி கலந்துரையாடல் மூலம் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04286-266435, 266650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலவயல் பெரியபூதன் சுவாமி கோயில் குடமுழுக்கு விழா

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்

புகழூா் கக்கன் காலனி பகவதியம்மன் கோயில் விழா

பிகாா்: வனவிலங்கு பூங்கா, பால்வள கல்வி நிறுவனத்துக்கு வைக்கப்பட்ட சஞ்சய் காந்தி பெயா் மாற்றம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

