மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி மண்கரடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் பாஸ்கர்(33), கர்ப்பிணியான மனைவி சரண்யா(25), மகள் பௌனிஷா(4) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் நாமக்கல் நகரில் உள்ள தனியார் மருத்துமனைக்கு வந்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
போடிநாயக்கன்பட்டி மயானம் அருகே சென்றபோது, எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த கணேசன் மகன் பாஸ்கர்(31) என்பவர் அந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெளனிஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
காயமடைந்த பாஸ்கர், சரண்யா இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பாஸ்கர் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வட கொரியாவுடன் அமைதிப் பேச்சு - தென் கொரிய அதிபா்

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 16) - கும்ப ராசிக்கு வெற்றி!

சிறாா்களுக்கான சமூக ஊடகத் தடைக்கு உச்சநீதிமன்றம் தடை

தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை ஆண்டு விழா
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


