மினி லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.
நாமக்கல் சாமி நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் (38), செவ்வாய்க்கிழமை மாலை தனது சரக்கு ஆட்டோவில் சோளத்தட்டு ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த ஆட்டோவில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா ஆகியோர் பயணம் செய்தனர்.
நாமக்கல் வள்ளிபுரம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு அருகே சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி லாரி மீது சரக்கு ஆட்டோ எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் ராஜேந்திரன், அவரது மனைவி சுகன்யா, மகள் தனிஷ்கா (10) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து 3 பேரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல்சிகிச்சைக்காக தனிஷ்கா நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த தனிஷ்கா நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர்!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!

புதுச்சேரி முதல்வராக வரும் 13-ல் பதவியேற்கும் என். ரங்கசாமி!
மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்?
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
