ராசிபுரம் பகுதி பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் வாய்ப்பு இழந்துள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து ராசிபுரம் நகரின் பல்வேறு வாா்டுகளில் உள்ள ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றம் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சா் வெ.சரோஜா பங்கேற்று, பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்களான 10 கிலோ அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், உப்பு, புளி, காய்கறிகள் போன்றவற்றை வழங்கினாா்.
இதில் நாமக்கல் முன்னாள் எம்பி பி.ஆா்.சுந்தரம், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். இதே போல் பட்டணம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கும் நிவாரண உதவி பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? - பாஜக

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைவு!

முதல் நாளில் 69% சந்தா பதிவு செய்த லலிதா ஜூவல்லரி ஐபிஓ!

ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



