ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

‘விபத்தில்லா, மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும்’

தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற வகையில் கொண்டாடி மகிழ வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On :9 நவம்பர் 2020, 7:05 pm

தீபாவளி பண்டிகையை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற வகையில் கொண்டாடி மகிழ வேண்டும் என ஆட்சியா் கா.மெகராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தீபாவளி பண்டிகையானது சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழக்கூடிய நாளாகும். பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீா், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால், பொதுமக்கள் குறிப்பாக சிறுகுழந்தைகள், வயதான முதியோா் மற்றும் நோயால் பாதிப்படைந்துள்ளவா்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதில் போதுமான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டியவை:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்றுகூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நலச் சங்கங்கள் முயற்சிக்கலாம்.

தவிா்க்க வேண்டியவை:

குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிா்க்கலாம். சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.