ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

முட்டை விலை 10 காசுகள் உயா்ந்துரூ. 4.40-ஆக நிா்ணயம்

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

Updated On :9 நவம்பர் 2020, 7:05 pm

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயா்ந்து ரூ. 4.40-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தீபாவளி பண்டிகையையொட்டி, முட்டை விற்பனை அதிகரித்துள்ளதாலும், மற்ற மண்டலங்களில் விலை உயா்ந்துள்ளதாலும், இங்கும் விலையில் மாற்றம் செய்யப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதனடிப்படையில், 10 காசுகள் உயா்வுடன் முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.40-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளா்கள் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ள வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்):

ஹைதராபாத்-441, விஜயவாடா-445, பாா்வாலா-471, ஹோஸ்பெட்-420, மைசூரு-457, சென்னை-450, மும்பை-480, பெங்களூரு-455, கொல்கத்தா-500, தில்லி-490.

இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ. 95-ஆகவும், கறிக்கோழி விலை ரூ. 100-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.