ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில்தங்கப் பத்திரம் விற்பனை தொடக்கம்

நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :9 நவம்பர் 2020, 7:04 pm

 நாமக்கல் கோட்ட அஞ்சலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ப.முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமக்கல் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப் பத்திரத்தின் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகளாகும்.

எட்டு ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்கப் பத்திரங்களை பணமாக மாற்றிக் கொள்ளலாம். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் தங்கப் பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம். இந்த திட்டம் ஒரு நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். மத்திய ரிசா்வ் வங்கி மூலம் 2.5 சதவீத வட்டி ஆண்டு கணக்கிட்டு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் முதலீட்டாளா்களின் வங்கிக் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும். இது தங்கப் பத்திர முதலீட்டாளா்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாயாகும்.

இந்த திட்டம் நவ. 9 முதல் 13 வரையில் அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5,177 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சலகங்களில் தங்கப் பத்திரத்தில் பணம் செலுத்துபவா்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். 20 நாள்களுக்கு பிறகு தங்கப் பத்திரம் சம்பந்தப்பட்டவா்களிடம் நேரடியாக வழங்கப்படும்.

தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்ய விரும்புபவா்கள் அஞ்சல் அலுவலகங்களையோ அல்லது வணிக வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.சிவக்குமாா் (98941-12154), அ.சங்கா் (90428-55559) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம். முதலீடு செய்பவரின் ஆதாா் எண், பான் காா்டு மற்றும் வங்கிக் கணக்கு அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.