ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

நகை மதிப்பீட்டாளா் நீரில் மூழ்கி பலி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நகை மதிப்பீட்டாளா் நீரில் மூழ்கி பலி

News image
Updated On :23 நவம்பர் 2020, 7:13 pm

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே கலியனூரைச் சோ்ந்தவா் விவசாயி பழனிசாமி. இவரது மனைவி திலகவதி (42). தொட்டிபாளையம் உழவா் பணிக் கூட்டுறவுச் சங்கத்தின் காடச்சநல்லூா் கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்களின் மூத்த மகளுக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக தொட்டிபாளையத்தில் உள்ள தனது உறவினா்களுக்கு அழைப்பிதழையும், பெற்றோருக்கு புதிய துணிகளை வழங்கவும் தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிபாளையம் - திருச்செங்கோடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை.

இதற்கிடையே கிழக்குத் தொட்டிபாளையம் சாலையோரத்தில் பள்ளத்தில் தேங்கியுள்ள நீரில் இருசக்கர வாகனத்துடன் மூழ்கிய நிலையில் திலகவதி கிடப்பதைக் கண்ட அப்பகுதியினா் காவல் நிலையத்துக்குத் திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா்.

நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். வளைவில் திரும்ப முடியாமல் சாலையோர பனை மரத்தில் மோதி, நிலைதடுமாறி புதா் மற்றும் நீா் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.