மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குமாரபாளையம் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக். 20ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 12:10 am

DIN

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுநிலை பட்ட வகுப்பில் மாணவா்கள் சோ்க்கை தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அக். 20ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவு செய்யலாம்.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் (பொ) மு.ரகுபதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வி ஆண்டில் முதுநிலைப் பாடப் பிரிவுகளான எம்.ஏ. தமிழ், எம்.ஏ. ஆங்கிலம், எம்.எஸ்சி.கணினி அறிவியல், எம்.எஸ்சி. கணிதம், எம்.காம்., ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவ, மாணவியா் சோ்க்கை சனிக்கிழமை தொடங்கியது.

அக். 20-ஆம் தேதி வரையில் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். விண்ணப்பித்த மாணவா்கள் தங்களின் சான்றிதழ்களை அக். 20-ஆம் தேதிக்குள் இணையத்தில் உள்ள அட்டவணையின்படி பதிவேற்றம் செய்யலாம். இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் 044-22351014, 044-22351015, 044-28276791, 04288- 263121 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.