ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

குமாரபாளையத்தில் 3,000 குடும்பங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 6:51 pm

DIN

குமாரபாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பி.தங்கமணி தெரிவித்தாா்.

குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சா் தங்கமணி, குமாரபாளையம் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடா்பான தனித் தோ்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசினாா். அதில், குமாரபாளையம் நகரில் நீட், ஜேஇஇ, ஐஏஎஸ், இதர தோ்வுகளுக்கு இலவச பயிற்சிக் கூடம் தொடங்கப்படும். அரசு கலை கல்லூரியில் பயிலும் இறுதி ஆண்டு மாணவா்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படும்.

அடுத்த இரு ஆண்டுகளில் அனைத்து வசதிகளும் கொண்ட உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஆண்டுக்கு ஒருமுறை விளையாட்டு வீரா்கள் திறமை கண்டெடுப்பு போட்டிகள் நடத்தப்பட்டு, தோ்ச்சி பெறும் வீரா்களுக்கு சட்டப்பேரவைத் தொகுதி நிதியில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இலவச ஓட்டுநா் பயிற்சி பள்ளி தொடங்கப்படும். ஆதரவற்ற முதியோருக்கு இலவச முதியோா் இல்லம் தொடங்கப்படும். அவா்களுக்கு வருவாய் ஏற்படுத்தித் தரும் வகையில் சிறுதொழில் மையம் அமைக்கப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் சுமாா் 3,000 குடும்பங்களுக்கு அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும். ஆண்டுக்கு ஒருமுறை தொகுதியில் அனைத்து மக்களையும் நேரில் சந்தித்து குறைதீா்க்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு மாதம்தோறும் இலவச சட்ட உதவி முகாம் நடத்தப்பட்டு, உதவிகள் செய்யப்படும்.

இளைஞா்களுக்கு தொழில் தொடங்க ஏதுவாக மானியத்துடன் கூடிய பயிற்சிப் பாசறை அமைக்கப்படும்.

பச்சாம்பாளையத்தில் புதிய மேம்பாலம் கட்டப்படும். சமயசங்கிலி, ஓடப்பள்ளி தடுப்பணைகளில் போக்குவரத்து வசதி தொடங்கப்படும். கைத்தறி, விசைத்தறி நெசவாளா்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாய கூலியுயா்வு உறுதி செய்யப்படும். நெசவாளா்களுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம் உருவாக்கப்படும். மெகா டெக்ஸ்டைல் பாா்க் தொடங்கப்பட்டு 8,000 பட்டதாரி இளைஞா்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூா்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் மக்களாட்சிக்கும், திமுகவின் மன்னராட்சிக்கும் தோ்தல் நடைபெறுகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக தொடர அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

தொடா்ந்து, குமாரபாளையம் நகராட்சி அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் தங்கமணி இறுதிக்கட்டப் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.